துபை, அபுதாபி நகரங்களில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டி, செப்டம்பர் 15-ல் தொடங்கி செப்டம்பர் 28 அன்று நிறைவுபெறுகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஷிகர் தவன் அறிவிக்கப்பட்டுள்ளார். யோ யோ தேர்வில் தேர்ச்சி அடைந்த அம்பட்டி ராயுடு இந்திய அணியில் இந்தமுறை சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இந்திய அணியில் சிலகாலம் இடம்பெறாமல் இருந்த கெதர் ஜாதவ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல புவனேஸ்வர் குமாரும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். கலீல் அகமத் என்கிற 20 வயது இடக்கை வேகப்பந்துவீச்சாளர் அணியில் புதிதாக இடம்பெற்றுள்ளார்.
கடந்த ஒரு வருடமாக கர்நாடக வீரர் மயங்க் அகர்வால் நல்ல ஃபார்மில் உள்ளார். கடந்த 9 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் நான்கு சதங்கள் அடித்துள்ளார். எனினும் அவர் இதுவரை இந்திய அணிக்குத் தேர்வாகவில்லை. இதுபற்றி இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:
கடந்த 10-12 மாதங்களில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார் மயங்க் அகர்வால். இந்திய அணிக்குத் தேர்வாக இன்னும் ஒரு படிதான் மீதமுள்ளது. விரைவில் அவருக்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். உள்ளூர் மற்றும் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் நன்றாக விளையாடி வருகிறார். மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கும்போது நிச்சயம் அவர் பெயரைப் பரிசீலனை செய்வோம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு
யு20 ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய மகளிருக்கு 2-ஆவது தோல்வி
கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
லாட்டரி விற்பனை: 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


