கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அஞ்சும், அபூர்விக்கு ஒலிம்பிக் வாய்ப்பு

தென் கொரியாவில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் மூலமாக, இந்திய வீராங்கனைகள் அஞ்சும் முட்கில்,

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 7:25 pm


தென் கொரியாவில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் மூலமாக, இந்திய வீராங்கனைகள் அஞ்சும் முட்கில், அபூர்வி சந்தேலா ஆகியோர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்தனர்.
அவர்கள் இருவருமே மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் போட்டியிட்டனர். அந்தப் பிரிவின் தகுதிச்சுற்றில் அஞ்சும், அபூர்வி ஆகிய இருவரும் முறையே 4 மற்றும் 6-ஆவது இடங்களைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
அதில் அஞ்சும் முட்கில் 248.4 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளியைக் கைப்பற்ற, அபூர்வி சந்தேலா 207 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தார். இதன் மூலமாக இருவருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பு உறுதியானது.
எனினும், சர்வதேச போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கிற்கான தேர்வுப் போட்டிகளில் இருவரும் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் அவர்களுக்கான இறுதி வாய்ப்பை இந்திய தேசிய ரைஃபிள் சங்கம் முடிவு செய்யும்.
இதனிடையே, திங்கள்கிழமை நடைபெற்ற ஆடவருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரரான தீபக் குமார், அதில் 6-ஆம் இடம் பிடித்தார்.
இந்த உலக சாம்பியன்ஷிப்பில் சீனியர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுவாகும். முன்னதாக, ஜூனியர் பிரிவில் இந்தியாவுக்கு 2 தங்கங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.