ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

துலிப் கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டம் இன்று தொடக்கம்

துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய ரெட் - இந்திய ப்ளூ அணிகள் மோதும் இறுதி ஆட்டம் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:23 pm


துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய ரெட் - இந்திய ப்ளூ அணிகள் மோதும் இறுதி ஆட்டம் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
அபினவ் முகுந்த் தலைமையிலான இந்திய ரெட் அணியில் ஜம்மு-காஷ்மீர் ஆஃப் ஸ்பின்னர் பர்வேஸ் ரசூல், ஜார்க்கண்ட் வீரர் ஷாபாஸ் நதீம், விதர்பா வேகப்பந்து வீச்சாளர் ரஜ்னீஷ் குர்பானி ஆகியோர் பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர்.
விதர்பாவின் சஞ்ஜய் ராமசாமி, தமிழகத்தின் பாபா அபராஜித், சித்தேஷ் லாட் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். கேப்டன் அபினவ் முகுந்துடன், முரளி விஜய், லோகேஷ் ராகுல், ஷிகர் தவன் ஆகியோரில் ஒருவர் களம் காணுவர் எனத் தெரிகிறது.
ஃபைஸ் ஃபாஸல் தலைமையிலான இந்திய ப்ளூ அணியைப் பொருத்த வரையில், தில்லி வீரர் துருவ் சோரே உள்ளிட்டோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட, பாசில் தாம்பி, ஜெயதேவ் உனத்கட், செளரவ் குமார் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்த காத்திருக்கின்றனர்.
ஆட்டம் நண்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.