கோவை: கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 21-ஆவது ஜே.கே.டயர்-எஃப்எம்எஸ்சிஐ தேசிய கார் சாம்பியன்ஷிப் போட்டியில், யூரோ ஜே.கே. 18 பிரிவின் 2-ஆவது சுற்றில் அஸ்வின் தத்தா முன்னணி பெற்றார்.
கோவை, செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் 21-ஆவது தேசிய அளவிலான கார் மற்றும் இருசக்கர வாகன 2-ஆவது சுற்றுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
இந்தப் போட்டிகளில் சென்னை, கோவை, தில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர்.
யூரோ ஜே.கே. 18 பிரிவில் அஸ்வின் தத்தா, பிரையன் பெரேரா ஆகியோர் முறையே 3 மற்றும் 4-ஆவது ரேஸ்களில் முதலிடம் பிடித்தனர். எல்.ஜி.பி. பார்முலா 4 போட்டியில் சென்னை வீரர்கள் விஷ்ணு பிரசாத், ராகுல் ரங்கசாமி ஆகியோர், முறையே 2 மற்றும் 3-ஆவது ரேஸ்களில் முதலிடம் பிடித்தனர்.
சுசூகி ஜிக்ஸர் கப் போட்டியில் ஜோசப் மேத்யூ முதலிடம் பிடித்தார். ரெட்புல் ரோடு டூ ரூர்க்கீஸ் பிரிவில் லால்மங்கை சங்கா முதலிடம் பிடித்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜே.கே.டயர் நோவிஸ் கோப்பை போட்டியில், பெங்களூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் திஜில் ராவ் முதலிடம் பெற்று பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாத எண்கணித பலன்கள் – 8

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

மே மாத எண்கணித பலன்கள் – 5
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

