கவுண்டி கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரு அரை சதங்கள் எடுத்த முரளி விஜய்! பலன் கிடைக்குமா?

இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் பிரமாதமாக விளையாடி, 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார் விஜய்...

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட தொடக்க வீரர் முரளி விஜய், தற்போது இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் எஸெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

நாட்டிங்ஹம்ஷைர் அணியுடனான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் முரளி விஜய் 56 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் பிரமாதமாக விளையாடி, 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார் விஜய்.

இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதற்கான அணி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் முரளி விஜய் மீண்டும் தன் திறமையை நிரூபித்து வருவதால் அவர் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாக வாய்ப்புண்டா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. எனினும் அத்தொடருக்கு ராகுல், பிருத்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகிய மூவருமே தொடக்க வீரர்களாகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.