ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றிகளைப் பதிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன்பதவியில் இருந்து சர்ஃப்ராஸ் அகமது நீக்கப்பட வேண்டும் என்பது போன்ற கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது குறித்து கூறுகையில்,
சர்ஃப்ராஸ் அகமது சிறந்த கேப்டன் ஆவார். அவரைப் போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்கள் தினமும் பிறப்பதில்லை. சர்ஃப்ராஸ் மிகவும் தைரியமானவர். கடந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் போது அவர் பாகிஸ்தான் அணியை திறம்பட வழிநடத்தினார்.
தற்சமயம் சர்ஃப்ராஸ் அமகதுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் துணை நிற்க வேண்டும். அவருக்கு தேவையான ஊக்கத்தை அளிக்க வேண்டும். ஏனெனில் இந்த தொடரிலும் ஒரு கேப்டனாக அவர் சரியாகவே செயல்பட்டார் என்று தெரிவித்தார்.
ஆசிய கோப்பை தொடரில் செப்டம்பர் 24-ஆம் தேதி வங்கதேசத்துடனான 3-ஆவது சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்றால், இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


