தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஓஸாமா எனக் கூறியதற்கு ஆதாரமில்லை: மொயின் அலி புகாரை மூடி வைத்த ஆஸி. கிரிக்கெட் வாரியம்

ஓஸாமா என ஆஸி. அணியின் வீரர் தன்னை அழைத்ததாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி எழுப்பிய புகார் போதிய ஆதாரமில்லாததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மூடி வைத்துவிட்டது. 

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 2:20 pm

ஓஸாமா என ஆஸி. அணியின் வீரர் தன்னை அழைத்ததாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி எழுப்பிய புகார் போதிய ஆதாரமில்லாததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மூடி வைத்துவிட்டது.

இஸ்லாமியரான மொயின் அலி இங்கிலாந்து அணியில் பல ஆண்டுகளாக ஆல்ரவுண்டர் நிலையில் ஆடி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது, கார்டிஃப் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 77 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் மொயின் அலி வீழ்த்தினார் .

இதுதொடர்பாக தான் எழுதவுள்ள சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள மொயின் அலி, அது சிறந்த டெஸ்ட் ஆட்டமாக அமைந்தது. எனினும் மைதானத்தில் ஒரு ஆஸி. வீரர் என்னை ஓஸாமா என்று அழைத்தார். இது எனக்கு கடும் கொதிப்பை ஏற்படுத்தியது. எனது சகவீரர்களிடம் இதுதொடர்பாக தெரிவித்தேன். 

இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் இதுதொடர்பாக ஆஸி. பயிற்சியாளர் லெமனிடம் புகார் எழுப்பி இருந்தார். லெமன் ஆஸி. வீரரிடம் கேட்ட போது தான் அவ்வாறு அழைக்கவில்லை என தெரிவித்துவிட்டார். ஆனால் அது உண்மை எனக் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கையில், இப்பிரச்னை மிகவும் கடுமையானதாகும். தேசிய அணியில் பங்கேற்று ஆடுவோருக்கு என தெளிவான வழிகாட்டுதல்கள், நடத்தை விதிகள் உள்ளன. இதை நாங்கள் தீவிரமாக கருதி, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் விவரங்களை கேட்டுள்ளோம் என்று

இந்நிலையில், இந்த புகார் மீதான விசாரணை நடைபெற்றது. அதில், இவ்விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று மொயின் அலி கேட்டுக்கொண்டதாகவும், அதுபோன்று அந்த புகாருக்கு போதிய ஆதராமில்லாததாலும் இதை இத்துடன் மூடி வைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.