ஐபிஎல் ஏலம்: நேரலைப் பதிவுகள்

ஐபிஎல் ஏலம்: நேரலைப் பதிவுகள்

ஐபிஎல் போட்டிக்காக பெங்களூரில் இன்றும் நாளையும் நடைபெறும் வீரர்கள் ஏலத்தில், 361 இந்தியர்கள் உள்பட 578 வீரர்கள் களத்தில் உள்ளனர்...

ஐபிஎல் ஏலம்: நேரலைப் பதிவுகள்

* கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ. 3 கோடிக்கு அங்கித் ராஜ்புத்தை தேர்வு செய்துள்ளது.

* அவேஸ் கான் ரூ. 70 லட்சத்துக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். 

* ரூ. 3 கோடிக்கு நவ்தீப் சைனியை ராயல் சேலஞ்சர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

* சையது காலீல் அகமது ரூ. 3 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.

* அங்கீத் சௌத்ரியை ரூ. 30 லட்சத்துக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது.

* சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி பாஸில் தம்ப்பியை ரூ. 95 லட்சத்துக்கு தேர்வு செய்துள்ளது.

* தமிழக வீரர் டி.நடராஜன் ரூ. 40 லட்சத்துக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 3.8 கோடிக்கு சித்தார்த் கௌலை ஏலம் எடுத்துள்ளது.

* குல்வந்த் கேஜ்ரோலியா ரூ. 85 லட்சத்துக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தேர்வு செய்துள்ளது.

*  மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 6.2 கோடிக்கு இஷான் கிஷனை ஏலம் எடுத்துள்ளது.

* ரூ. 7.2 கோடிக்கு ஜோஃப்ரா ஆர்ச்சரை தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

* அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு ஷிவம் துபேவை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 3.4 கோடிக்கு நிதிஷ் ராணாவை தேர்வு செய்துள்ளது.

* க்ருணால் பாண்டியா ரூ. 8.8 கோடிக்கு ரைட் டு மேட்ச் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துக்கொண்டது.

*  யு-19 வேகப்பந்துவீச்சாளர் கமலேஷ் நாகர்கோட்டி ரூ. 3.2 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்துள்ளது.

* ஹர்ஷல் படேல் அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

* தமிழக வீரர் விஜய் சங்கர் ரூ. 3.2 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

* தீபக் ஹுடாவை ரூ. 3.6 கோடிக்கு ரைட் டு மேட்ச் அடிப்படையில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தக்க வைத்தது.

* ராகுல் த்வேடியாவை ரூ. 3 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

* யு-19 உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி கேப்டன் பிருத்வி ஷா ரூ. 1.2 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* மனன் வோஹ்ரா ரூ. 1.1 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரைட் டு மேட்ச் பயன்படுத்தவில்லை.

* ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 3.4 கோடிக்கு ராகுல் திரிபாதியை ஏலம் எடுத்தது.

* மயங்க் அகர்வாலை ரூ. 1 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் தேர்வு செய்துள்ளது.

* சுப்மன் கில் கொல்கத்தா அணிக்குத் தேர்வாகியுள்ளார். ரூ. 1.80 கோடி.

*  இஷாங் ஜக்கியை கொல்கத்தா அணி ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது.
* ரிக்கி பூயை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது சன் ரைசர்ஸ்.

* சூர்யகுமார் யாதவை ரூ. 3.20 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது மும்பை அணி.

* குல்தீப் யாதவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 5.80 கோடிக்குத் தக்கவைத்துள்ளது.

* ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பாவை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.

* சாஹாலை பெங்களூர் அணி ரூ. 6 கோடிக்குத் தக்கவைத்துள்ளது.

* அமித் மிஸ்ராவை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது தில்லி.

* சாமுவேல் பத்ரியை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.

* அட! ரஷித் கானை 9 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப். ஆனால் ஆர்டிஎம் முறையில் அவரைத் தக்கவைத்துக்கொண்டது சன் ரைசர்ஸ்.

* இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறும் 3-வது டெஸ்டில் விளையாடி வரும் முரளி விஜய், பார்தீவ் படேல், இஷாந்த் சர்மா என மூன்று இந்திய வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகவில்லை.

* கரண் சர்மாவை 5 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சென்னை. சென்னை அணியில் 30 வயதுக்கு மேலுள்ள 11-வது வீரர்!

* நெ.1 டி20 பந்துவீச்சாளரான இஷ் சோதியை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.

* இம்ரான் தாஹிரை அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே.

* பியூஷ் சாவ்லாவை கொல்கத்தா தேர்வு செய்துள்ளது. ரூ. 4.20 கோடி. சென்னை இவரைத் தேர்வு செய்ய முயன்றது. எனினும் ஆர்டிஎம் முறையில் கொல்கத்தா தேர்வு செய்தது.

* ககிசோ ரபாடாவை தில்லி அணி தக்கவைத்துள்ளது. ரூ. 4.20 கோடி. சென்னை அணி இவரை தேர்வு செய்ய முயன்றது. எனினும் கடைசியில் ஆர்டிஎம் முறையில் தில்லி அணி தேர்வு செய்தது.

* லசித் மலிங்காவை எந்தவொரு அணியும் தேர்வு செய்யவில்லை. மிட்செல் மெக்லெனகனையும் யாரும் தேர்வு செய்யவில்லை. 

* டிம் செளதி, இஷாந்த் சர்மா ஆகியோரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. இஷாந்த் சர்மாவைக் கடந்த வருடமும் யாரும் தேர்வு செய்யவில்லை.

* முகமது ஷமியை தில்லி அணி தக்கவைத்துள்ளது. ரூ. 3 கோடி.

* உமேஷ் யாதவை பெங்களூர் அணி தேர்வு செய்துள்ளது. ரூ. 4.20 கோடி.

* பேட் கம்மின்ஸை மும்பை அணி தேர்வு செய்துள்ளது. 5.40 கோடி.

* முஸ்தாஃபிசுர் ரஹ்மானை மும்பை அணி ரூ. 2.20 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

* மிட்செல் ஜான்சன், ஹேஸில்வுட் ஆகியோரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. இது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

* ஜாஸ் பட்லரை ராஜஸ்தான் அணி தேர்வு செய்துள்ளது. ரூ. 4.40 கோடி.

* அம்பட்டி ராயுடுவை ரூ. 2.20 கோடிக்கு சென்னை அணி தேர்வு செய்துள்ளது.

* சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்குத் தேர்வு. ரூ. 8 கோடி.

* ராபின் உத்தப்பாவை கொல்கத்தா அணி தக்கவைத்துள்ளது. ரூ. 6.40 கோடி.
* நமன் ஓஜாவை யாரும் தேர்வு செய்யவில்லை.

* தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணிக்குத் தேர்வாகியுள்ளார். ரூ. 7.40 கோடி. கொல்கத்தா அணி இன்று தேர்வு செய்யும் முதல் இந்திய வீரர் இவர்.

* இந்திய விக்கெட் கீப்பர் சாஹாவை ரூ. 5 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சன் ரைசர்ஸ்.

* விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவை யாரும் தேர்வு செய்யவில்லை.

* தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாக்கை பெங்களூர் தேர்வு செய்துள்ளது. ரூ. 2.80 கோடி.

* மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஐபிஎல் ஏலம் தொடங்கியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் - இதுவரை தேர்வானவர்கள்

தோனி - ரூ. 15 கோடி

சுரேஷ் ரெய்னா ரூ. 11 கோடி

கெதர் ஜாதவ் - ரூ. 7.80 கோடி

ஜடேஜா - ரூ. 7 கோடி

பிராவோ: ரூ. 6.40 கோடி

ஷேன் வாட்சன் - ரூ. 4 கோடி

ஹர்பஜன் சிங்: ரூ. 2 கோடி

டு பிளெஸ்ஸி - ரூ. 1.60 கோடி

ஜடேஜா, பிராவோ, வாட்சன், ஹர்பஜன் சிங், கெதர் ஜாதவ் என சென்னை அணி அனுபவம் வாய்ந்த 5 ஆல்ரவுண்டர்களைத் தேர்வு செய்துள்ளது.

* மொயீன் அலியை பெங்களூர் அணி ரூ. 1.70 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

* மார்கஸ் ஸ்டாய்னிஸை பஞ்சாப் அணி ரூ. 6.20 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

* காலின் மன்ரோவை ரூ. 1.90 கோடிக்கு தில்லி டேர்டெவில்ஸ் தேர்வு செய்துள்ளது.
* ஸ்டூவர்ட் பின்னியை ரூ. 50 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் தேர்வு செய்துள்ளது.

* யூசுப் பதானை ரூ. 1.9 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சன் ரைசர்ஸ்.

* ஆல்ரவுண்டர் கிராண்ட்ஹோமை ரூ. 2.20 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சன் ரைசர்ஸ்.

* ஜேம்ஸ் ஃபார்க்னரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.

* ஆல்ரவுண்டர் கெதர் ஜாதவை ரூ. 7.80 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

* ஷேன் வாட்சனை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

* இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸை, ரூ. 7.40 கோடிக்கு பெங்களூர் அணி தேர்வு செய்துள்ளது.

* மே.இ. அணி ஆல்ரவுண்டர் பிராத்வொயிட்டை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சன் ரைசர்ஸ்.

* மனீஷ் பாண்டேவை ரூ. 11 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

* நியூஸிலாந்து வீரர் கப்திலை யாரும் தேர்வு செய்யவில்லை.

* கிறிஸ் லின் 9.60 கோடிக்கு கொல்கத்தா அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

* ஜேசன் ராயை ரூ. 1.50 கோடிக்கு தில்லி அணி தேர்வு செய்துள்ளது.

* மெக்கல்லம் பெங்களுர் அணிக்குத் தேர்வாகியுள்ளார். ரூ. 3.60 கோடி. பெங்களூர் அணி இன்று தேர்வு செய்துள்ள முதல் வீரர்.

* ஆஸி. தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச்சை ரூ. 6.2 கோடிக்கு பஞ்சாப் அணி தேர்வு செய்துள்ளது.

* டேவிட் மில்லரை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப்.

* முரளி விஜய்யை எந்தவொரு அணியும் தேர்வு செய்யவில்லை.

* கே.எல். ராகுலை ரூ. 11 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப்.

* கருண் நாயரை ரூ. 5.60 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப்.

* யுவ்ராஜ் சிங்கை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப்
* இங்கிலாந்தின் ஜோ ரூட்டை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.
* கேன் வில்லியம்சனை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது ஹைதராபாத்.

* சென்னை அணிக்கு பிராவோ தேர்வு! ரூ. 6.40 கோடி

* கம்பீரை ரூ. 2.80 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது தில்லி.

* மேக்ஸ்வெல் தில்லி அணிக்குத் தேர்வு. ரூ. 9 கோடி. 

* ஷகிப் அல் ஹசனை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது ஹைதராபாத்.

ஹர்பஜன் சிங்கை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - இதுவரை தேர்வான வீரர்கள்

தோனி - ரூ. 15 கோடி
சுரேஷ் ரெய்னா ரூ. 11 கோடி 
ஜடேஜா - ரூ. 7 கோடி
டு பிளெஸ்ஸி - ரூ. 1.60 கோடி

மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூ. 9.40 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

ரஹானேவை ஆர்டிஎம் முறையில் ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

டு பிளெஸ்ஸியை ரூ. 1.60 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ. 12.50 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

* கிறிஸ் கெயிலை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 

* கிரோன் பொலார்டை ஆர்டிஎம் முறையில் மும்பை அணி ரூ. 5.40 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

* ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வினை பஞ்சாப் அணி ரூ. 7.60 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

* ஷிகர் தவன், பஞ்சாப் அணிக்கு ரூ. 5.20 கோடிக்குத் தேர்வானார். ஆனால் ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தி அதே தொகைக்கு ஹைதரபாத் அணி ஷிகர் தவனைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டிக்காக பெங்களூரில் இன்றும் நாளையும் நடைபெறும் வீரர்கள் ஏலத்தில், 361 இந்தியர்கள் உள்பட 578 வீரர்கள் களத்தில் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்பட 8 ஐபிஎல் அணிகளில் இடம்பெறவுள்ள வீரர்கள், ஏலம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய அணியின் யுவராஜ் சிங், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் உள்பட 578 உள்நாட்டு மற்றும் சர்வதேச வீரர்கள் பதிவு செய்துகொண்டுள்ளதாக பிசிசிஐ அமைப்பு தெரிவித்தது. இவர்களில் 360 இந்திய வீரர்கள் மற்றும் 218 வெளிநாட்டு வீரர்கள். 

ஐபிஎல் 2018: அணிகள் தக்கவைத்துக்கொண்ட வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்

தோனி (சம்பளம் - ரூ. 15 கோடி), சுரேஷ் ரெய்னா (ரூ. 11 கோடி),  ஜடேஜா (ரூ. 7 கோடி

மும்பை இந்தியன்ஸ்

ரோஹித் சர்மா (ரூ. 15 கோடி), ஹார்திக் பாண்டியா (ரூ. 11 கோடி), பூம்ரா (ரூ. 7 கோடி)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலி (ரூ. 17 கோடி), டி வில்லியர்ஸ் (ரூ. 11 கோடி), சர்பராஸ் கான் (ரூ. 1.75 கோடி)

கொல்கத்தா  நைட் ரைடர்ஸ்

சுனில் நரைன் (ரூ. 8.5 கோடி), ஆண்ட்ரே ரஸல் (ரூ. 7 கோடி)

தில்லி டேர்டெவில்ஸ்

ரிஷப் பந்த் (ரூ. 8 கோடி), கிறிஸ் மாரிஸ் (ரூ. 7.1 கோடி), ஷ்ரேயாஸ் ஐயர் (ரூ. 7 கோடி)

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

அக்‌ஷர் படேல் (ரூ. 6.75 கோடி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

டேவிட் வார்னர் (ரூ. 12 கோடி), புவனேஸ்வர் குமார் (ரூ. 8.5 கோடி)

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஸ்டீவ் ஸ்மித் (ரூ. 12 கோடி)

ஐபிஎல் போட்டியில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்

2008: தோனி ($1.5 மில்லியன்)
2009: ஃபிளிண்டாப் & பீட்டர்சன் ($1.55 மில்லியன்)
2010: பாண்ட் & பொல்லார்ட் ($0.75 மில்லியன்)
2011: கம்பீர் ($2.4 மில்லியன்)
2012: ஜடேஜா ($2 மில்லியன்)
2013: மேக்ஸ்வெல் ($1 மில்லியன்)
2014: யுவ்ராஜ் ( ரூ. 14 கோடி)
2015: யுவ்ராஜ் (ரூ. 16 கோடி)
2016: வாட்சன் (ரூ. 9.5 கோடி)
2017: ஸ்டோக்ஸ் (ரூ. 14.5 கோடி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com