ஐபிஎல் முதல் நாள் ஏலத்தின் சுவாரஸ்யங்கள்!

ஐபிஎல் 11-ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் பல ஆச்சரியங்கள் நடந்தன. இதில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள், அணிகள் வைத்திருக்கும் பாக்கித் தொகை...
ஐபிஎல் முதல் நாள் ஏலத்தின் சுவாரஸ்யங்கள்!

ஐபிஎல் 11-ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் ஏலத்தில் பல ஆச்சரியங்கள் நடந்தன. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை. அதேசமயம் பிபிஎல் உள்ளிட்ட வெளிநாடு டி20 போட்டிகளில் ஜொலித்த புதுமுக வீரர்களுக்கு ஏக கிராக்கி இருந்தது. 

ஐபிஎல் முதல் நாள் ஏலத்தில் மட்டும் மொத்தம் 78 வீரர்கள் விலை போயினர். இதற்காக அனைத்து அணிகளும் சேர்த்து ரூ. 3,21,10,00,000 கோடியை செலவு செய்துள்ளது.

ஆச்சரியமளிக்கும் வகையில் கடந்த முறை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்தின் முன்னணி ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இம்முறையும் அதே பெருமையைப் பெற்றார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 12.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. 

அதுபோல இந்திய வீரர்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த மணீஷ் பாண்டே மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் ரூ. 11 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். க்ருணால் பாண்டியா ரூ. 8.80 கோடிக்கும், சஞ்சு சாம்சன் ரூ. 8 கோடிக்கும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

பெரிதும் தெரியாத வெளிநாட்டு வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ரூ. 7.20 கோடிக்கு விலை போனாலும், இந்தியாவின் நட்சத்திர வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ரூ. 2 கோடிக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டனர்.

நிர்ணயிக்கப்பட்ட தொகையில் முதல் நாள் ஏலத்தில்...

  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 11 வீரர்களை ஏலம் எடுத்ததில் ரூ. 17 கோடி மட்டுமே மீதமுள்ளது.
  • டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 15 வீரர்களை ஏலம் எடுத்ததில் ரூ. 12.30 கோடி மட்டுமே மீதமுள்ளது.
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 10 வீரர்களை ஏலம் எடுத்ததில் ரூ. 21.90 கோடி மட்டுமே மீதமுள்ளது.
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 12 வீரர்களை ஏலம் எடுத்ததில் ரூ. 7.60 கோடி மட்டுமே மீதமுள்ளது.
  • மும்பை இந்தியன்ஸ் அணி 3 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 9 வீரர்களை ஏலம் எடுத்ததில் ரூ. 15.80 கோடி மட்டுமே மீதமுள்ளது.
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 9 வீரர்களை ஏலம் எடுத்ததில் ரூ. 23.50 கோடி மட்டுமே மீதமுள்ளது.
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 14 வீரர்களை ஏலம் எடுத்ததில் ரூ. 15.85 கோடி மட்டுமே மீதமுள்ளது.
  • சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 5 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 16 வீரர்களை ஏலம் எடுத்ததில் ரூ. 7.95 கோடி மட்டுமே மீதமுள்ளது.

ஒவ்வொரு அணியும் அதிக விலைக்கு ஏலம் எடுத்த வீரர்கள்...

  • ராஜஸ்தான் ராயல்ஸ் - பென் ஸ்டோக்ஸ் - ரூ. 12.50 கோடி
  • சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் - மணீஷ் பாண்டே - ரூ. 11 கோடி
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கே.எல்.ராகுல் - ரூ. 11 கோடி
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிறிஸ் லயன் - ரூ. 9.60 கோடி
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மிட்செல் ஸ்டார்க் - ரூ. 9.40 கோடி
  • டெல்லி டேர்டெவில்ஸ் - கிளென் மேக்ஸ்வெல் - ரூ. 9 கோடி
  • சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் - ரஷித் கான் - ரூ. 9 கோடி
  • மும்பை இந்தியன்ஸ் - க்ருணால் பாண்டியா - ரூ. 8.80 கோடி
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன் - ரூ. 8 கோடி
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - கேதர் ஜாதவ் - ரூ. 7.80 கோடி
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் - அஸ்வின் - ரூ. 7.60 கோடி
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - தினேஷ் கார்த்திக் - ரூ. 7.40 கோடி
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கிறிஸ் வோக்ஸ் - ரூ. 7.40 கோடி
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜோஃப்ரா ஆர்ச்சர் - ரூ. 7.20 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com