எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நாங்கள் விளையாடியபோது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இருந்திருந்தால்...: ஸ்டீவ் வாஹ் ஏக்கம்!

ஆனால் நாங்கள் தான் நெ.1 என்பதற்கான ஆதாரம் இல்லை. ஓர் இறுதிச்சுற்று இருந்து அதில் வெற்றி பெற்று...

News image
Updated On :1 ஆகஸ்ட் 2019, 10:13 am

எழில்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் போட்டி, பிர்மிங்காமில் இன்று தொடங்கியுள்ளது. இதன்மூலம் அனைவரும் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியும் ஆஷஸ் தொடர் மூலமாக அமர்க்களமாகத் தொடங்கியுள்ளது. 27 தொடர்களில் மொத்தம் 72 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மே.இ. தீவுகள், வங்கதேசம் உள்ளிட்ட 9 அணிகள் ஆடுகின்றன. இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் வரும் 2021 ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மோதும்.

இந்நிலையில் ஐசிசி இணையத்தளத்துக்கு எழுதிய கட்டுரையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறியுள்ளதாவது:

1999 முதல் 2001 வரை என் தலைமையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 16 டெஸ்டுகளை வென்றது. இது என் அணிவீரர்களின் அமர்க்களமான சாதனை. நாங்கள் விளையாடிய காலக்கட்டத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இருந்திருக்கவேண்டும். 

2001-ல் நாங்கள் தொடர்ச்சியாக வென்றபோது நாங்கள்தான் நெ.1 அணி என எண்ணினோம். மற்றவர்களும் அதையே கூறினார்கள். ஆனால் நாங்கள் தான் நெ.1 என்பதற்கான ஆதாரம் இல்லை. ஓர் இறுதிச்சுற்று இருந்து அதில் வெற்றி பெற்று கோப்பையைக் கையில் ஏந்தும் தருணம் எங்களுக்குக் கிடைத்திருக்கவேண்டும். 

50 ஓவர், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகக் கோப்பைப் போட்டி இருக்கும்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் ஏன் இருக்கக்கூடாது? 

இது பணத்துக்காகவே புகழுக்காகவோ அல்ல, மதிப்புக்காக. நீங்கள்தான் நெ. 1 டெஸ்ட் அணி என்று சொல்வதற்கான வாய்ப்பை இந்தப் போட்டி அளிக்கிறது என்று கூறியுள்ளார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 27 தொடர்களில் மொத்தம் 72 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மே.இ. தீவுகள், வங்கதேசம் உள்ளிட்ட 9 அணிகள் ஆடுகின்றன. இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் வரும் 2021 ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மோதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.