அஸ்வினைக் குழப்ப இடக்கையால் பேட்டிங் செய்த முரளி விஜய்! (விடியோ)

தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் விதவிதமான பாணியில் அஸ்வின் பந்துவீசிவருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்...
அஸ்வினைக் குழப்ப இடக்கையால் பேட்டிங் செய்த முரளி விஜய்! (விடியோ)
Updated on
1 min read

தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் விதவிதமான பாணியில் அஸ்வின் பந்துவீசிவருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதை எதிர்கொள்ள முரளி விஜய் கையாண்ட உத்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நத்தம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வரும் முரளி விஜய், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் விளையாடும் அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொண்டார். 16-வது ஓவரின்போது, அஸ்வின் பந்தை வீசத் தொடங்கும் முன்பே தனது ஸ்டான்ஸை மாற்றி இடக்கையால் விளையாட முயற்சி செய்தார் முரளி விஜய். இரு பந்துகளை அதுபோல விளையாடிய விஜய், பிறகு அஸ்வின் பந்துவீச்சை நோ பால் என நடுவர் அறிவித்தபோது தனது வழக்கமான வலக்கை பேட்டிங்குக்கு மாறி, அடுத்தப் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். 

டிஎன்பிஎல் நிர்வாகம் இதன் விடியோவைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com