தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அதிக வருவாய் ஈட்டிய வீராங்கனைகள்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீராங்கனை!

உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள டாப் 15 பட்டியலில்...

News image
Updated On :7 ஆகஸ்ட் 2019, 11:11 am

எழில்

உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள டாப் 15 பட்டியலில் ஒரே இந்தியராக பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இடம்பிடித்துள்ளார். 

அவரது ஆண்டு வருவாய் ரூ. 39 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரங்கள் உள்ளிட்ட வகைகளில் சுமார் ரூ. 35 கோடியும், இந்திய அணியில் ஊதியமாக பெற்றது, போட்டிகளில் வென்றது போன்ற வகையில் ரூ. 4 கோடியும் சிந்து ஈட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1, 2018 முதல் ஜூன் 1, 2019 வரையிலான காலக்கட்டத்தில் வீராங்கனைகள் ஈட்டிய வருவாய், கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ. 35 கோடி ($ 5 மில்லியன்) வருவாய் ஈட்டிய வீராங்கனைகள் டாப் 15 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்.

உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (37) நான்காவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது ஆண்டு வருவாய் சுமார் ரூ 207 கோடி ($29.2 மில்லியன்)  என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  முதல் 15 இடம் பிடித்த வீராங்கனைகளில் 11 பேர் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடுபவர்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.