இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற வீரர்களை இனியும் நாம் இழக்கக் கூடாது: மே.இ. தீவுகள் முன்னாள் வீரர் கோரிக்கை!

ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற வீரர்களை மே.இ. தீவுகள் அணி இனியும் இழக்கக் கூடாது என முன்னாள் வீரர் டினோ பெஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளார்...

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:51 am

எழில்

ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற வீரர்களை மே.இ. தீவுகள் அணி இனியும் இழக்கக் கூடாது என முன்னாள் வீரர் டினோ பெஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளின் ஒன்றான பார்படாஸில் பிறந்த ஜோஃப்ரா ஆர்ச்சரின் தாய் மேற்கிந்தியத் தீவுகள் பகுதியைச் சேர்ந்தவர். தந்தையின் தாய்நாடு இங்கிலாந்து. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுவதற்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் விளையாடவே விருப்பம் கொண்டார் ஆர்ச்சர். அவருக்கு முன்பு மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிறிஸ் ஜார்டன், பிறகு இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். அவர்தான் ஆர்ச்சருக்குப் பெரிய ஊக்கமாக இருந்தார். 2013-ல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பிடித்தார் ஆர்ச்சர். பிறகு காயமடைந்ததால் அவரால் பார்படாஸ் அணியில் தொடர்ந்து நீடிக்கமுடியவில்லை. தனக்கான ஊக்கம் கிடைக்காமல் இருந்த நிலையில் அவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தார் கிறிஸ் ஜார்டன்.

பார்படாஸ் அணியின் வலைப்பயிற்சியில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சைக் கண்ட ஜார்டன், இங்கிலாந்து கவுண்டி அணியான சஸ்ஸக்ஸ் நிர்வாகத்தினரிடம் ஆர்ச்சரைப் பற்றிக் கூறினார். இதையடுத்து சஸ்ஸக்ஸ் அணியில் ஆர்ச்சர் இடம்பிடித்தார். 2016-ல் அந்த அணிக்காக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினார். வேகப்பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாகவும் விளையாடியதால் அதிகக் கவனம் பெற்றார். அவரை டி20 கிளப்புகள் மொய்க்க ஆரம்பித்தன. ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ், பங்களாதேஷ் பிரிமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என முக்கியமான டி20 போட்டிகளில் விளையாடியவர், கடந்த வருடம் ஐபிஎல் போட்டியிலும் அறிமுகமானார். கடந்தவருட ஐபிஎல் ஏலத்தில், ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ. 7.20 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. அதுவரை எந்தவொரு சர்வதேச ஆட்டத்திலும் விளையாடாமல் டி20 லீக் போட்டிகளிலும் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியே புகழ்பெற்ற ஆர்ச்சரை உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்தது இங்கிலாந்து அணி. கடைசியில் அந்த அணி உலகக் கோப்பையை வெற்றி பெற ஆர்ச்சரும் முக்கியக் காரணமாக அமைந்தார்.  தற்போது, இங்கிலாந்து அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளில் இடம்பிடித்துள்ளார்.

நேற்று டிரா ஆன லார்ட்ஸ் டெஸ்டில் மொத்தமாக 5 விக்கெட்டுகள் எடுத்து அதிகக் கவனம் ஈர்த்துள்ளார் ஆர்ச்சர். இங்கிலாந்து அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்வதற்கு இவர் முக்கியக் காரணமாக இருக்கப் போகிறார் என கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இதையடுத்து, மே.இ. தீவுகள் அணியின் முன்னாள் வீரர்  டினோ பெஸ்ட், மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியமும் பார்படாஸ் கிரிக்கெட் சங்கமும் இணைந்து விரைவாக நடவடிக்கைகள் எடுத்து ஆர்ச்சர் போன்ற வீரர்களை வருங்காலத்தில் இழக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மே.இ. அணி சீருடையை அவர் அணியவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். 

டினோ பெஸ்ட், மே.இ. தீவுகள் அணிக்காக 25 டெஸ்ட், 26 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.