ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

கோலி அரைசதம், ஹோல்டர் 3 விக்கெட்டுகள்: கடும் போட்டியில் முதல்நாள் ஆட்டம்

மே.இ.தீவுகள் தரப்பில் கேப்டன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 

News image
Updated On :31 ஆகஸ்ட் 2019, 2:59 am

இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஐமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபைனா பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 163 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் சேர்த்தார். துவக்க வீரர் மயங்க் அகர்வால் 55 ரன்கள் எடுத்தார். 

ஹனுமா விஹாரி 42 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மே.இ.தீவுகள் தரப்பில் கேப்டன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ரோச், கார்ன்வால் தலா 1 விக்கெட் எடுத்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.