இந்திய-மே.இ.தீவுகள் 2-ஆவது டெஸ்டில் வர்ணனையாளராக பணிபுரியும் ஜாம்பவான் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் (67) திடீரென மயங்கி விழுந்தார். கள நிலவரங்கள் குறித்த ஆய்வு வர்ணனை செய்து கொண்டிருந்த போது மைதானத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உணவு இடைவேளையின் போது மீண்டும் வர்ணனைப் பணியை தொடர்ந்தார்.
பின்னர் இதுகுறித்து விவியன் ரிச்சர்ட்ஸ், ட்விட்டரில் பதிவிட்டதாவது:
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு நான் குணமடைந்துவிட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனது வர்ணனைப் பணியை மீண்டும் தொடர்கிறேன்.
வேறு எந்த பந்துவீச்சாளராலும் செய்ய முடியாததை இயற்கை செய்து என்னை சாய்த்து விட்டது (வெப்பம் காரணமாக மயங்கி விழுந்தது). இயற்கையை நாம் மதிக்க வேண்டும் என்று நகைச்சுவையுடன் பதிவிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!

குமரியில் இன்று சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கும் விஜய்!
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


