டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் சென்னையில் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறவுள்ளது. 18-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஆட்டமும், 22-இல் கட்டாக்கில் மூன்றாவது ஆட்டமும் நடக்கிறது.
இந்நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டத்துக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பும்ராவுக்கு அவரது கழுத்தின் கீழ்பகுதியில் முறிவு இருந்தது. இதனால் அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துபோது கடைசியாக விளையாடினார் பும்ரா. அதன்பிறகு காயம் காரணமாக அவர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.
இதனிடையே காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பும்ரா, விசாகப்பட்டினத்தில் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளார். அங்கு அவருடைய உடற்தகுதி குறித்து ரவி சாஸ்திரியும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருணும் பரிசோதனை செய்யவுள்ளார்கள்.
ஜனவரி மாதம் இந்திய அணி இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுடன் விளையாடவுள்ளது. இதன்பிறகு, நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. ஜனவரி 14 முதல் தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் தொடர்களில் பும்ரா முழு உடற்தகுதியுடன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


