புவனேஸ்வர் குமாருக்குக் காயம்: ஒருநாள் தொடரில் பங்கேற்பாரா?

டி20 தொடரில் விளையாடிய போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குக் காயம் ஏற்பட்டது.
புவனேஸ்வர் குமாருக்குக் காயம்: ஒருநாள் தொடரில் பங்கேற்பாரா?
Updated on
1 min read

டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் சென்னையில் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறவுள்ளது. 18-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஆட்டமும், 22-இல் கட்டாக்கில் மூன்றாவது ஆட்டமும் நடக்கிறது.

இந்நிலையில் டி20 தொடரில் விளையாடிய போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஒருநாள் தொடரிலிருந்து அவர் விலகுவார் என்று அறியப்படுகிறது. இதனால், புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக சைனி, கலீல் அகமது, ஷர்துல் தாக்குர் ஆகிய மூவரிலிருந்து ஒருவர், ஒருநாள் தொடருக்குத் தேர்வு செய்யப்படவுள்ளார். புவனேஸ்வர் குமாரின் காயம் குறித்த நிலவரத்தை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com