மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஹேசில்வுட்டைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2019, 1:54 pm

DIN


ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரர்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

இதில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னேவை யாரும் தேர்வு செய்யவில்லை. இத்துடன், ஐபிஎல் ஏலத்தின் முதல் அமர்வு முடிவுக்கு வந்தது. ஒருமணி நேர இடைவேளைக்குப் பிறகு ஐபிஎல் ஏலம் மீண்டும் தொடங்கவுள்ளது.

ஏலத்தின் முதல் அமர்வில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவை ரூ. 6.75 கோடிக்கும், இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் சாம் கரண்ணை ரூ. 5.50 கோடிக்கும் ஏலம் எடுத்தது.

இந்த முதல் அமர்வில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக ரூ. 15.50 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் தேர்வானார். இவருக்கு அடுத்தபடியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வேல் ரூ. 10 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குத் தேர்வானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.