தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

டேவிஸ் கோப்பை: இத்தாலியிடம் தோற்றது இந்திய அணி! 

இத்தாலிக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது... 

News image
Updated On :2 பிப்ரவரி 2019, 9:36 am

எழில்

இத்தாலிக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. 

டேவிஸ் கோப்பை புதிய முறையின்படி வரும் நவம்பர் மாதம் மாட்ரிட்டில் உலக குரூப் பைனல்ஸ் போட்டிகள் நடக்கின்றன. இதில் தேர்வு பெறுவதற்கான தகுதி ஆட்டங்கள் உலகம் முழுவதும் பிப். 1, 2 தேதிகளில் 12 நகரங்களில் நடக்கிறது. கொல்கத்தா செளத் கிளப்பில் இந்தியா-இத்தாலி மோதிய தகுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெற்றன. களிமண் தரையில் வலுவான அணியான இத்தாலியை எதிர்கொள்ளும் வகையில் போட்டி புல்தரை மைதானத்தில் நடத்தப்பட்டது. இதனால் 

முதல் ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் 37-ஆம் நிலை வீரர் ஆன்ட்ரியஸ் சிப்பியும்--இந்தியாவின் ராம்குமார் ராமநாதனும் மோதினர். தொடக்கத்தில் சிப்பி தடுமாறினாலும், ஆட்டத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி 6-4, 6-2  என நேர் செட்களில் ராம்குமாரை வென்றார். இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்-இத்தாலியின் மேட்டியோ பெர்ரட்னியை எதிர்கொண்டார். ஆனால் எந்த சிக்கலும் இன்றி மேட்டியோ 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரஜ்னேஷை வீழ்த்தினார். இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இதில் 2--0 என இத்தாலி முன்னிலை பெற்றது. போட்டியில் வெல்ல மீதமுள்ள இரட்டையர், 2 மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் வெல்ல வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.

இன்று நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில், சைமோன் பொலேலி - மேட்டியோ பெர்ரட்னி இணையை எதிர்கொண்டது இந்தியாவின் போபண்ணா-திவிஜ் சரண் இணை. இதில், 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றது இந்திய அணி. 

எனினும் 4-வது ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஆன்ட்ரியஸ் சிப்பியிடம் 1-6, 4-6 என்ற செட் கணக்கில் தோற்றார். இதையடுத்து 3-1 என்கிற கணக்கில் இந்தியாவைத் தோற்கடித்தது இத்தாலி அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.