பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

தோனியாலும் ஆட முடியாத கடினமான பிட்ச்

தோனியாலும் ஆட முடியாத கடினமான பிட்ச் என ஆஸி. அதிரடி வீரர் மேக்ஸ்வெல், விசாகப்பட்டினம் மைதானத்தை பற்றி கூறியுள்ளார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:20 am IST


தோனியாலும் ஆட முடியாத கடினமான பிட்ச் என ஆஸி. அதிரடி வீரர் மேக்ஸ்வெல், விசாகப்பட்டினம் மைதானத்தை பற்றி கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. கடைசியாக ஆடிய தோனி, 37 பந்துகளில் 29 ரன்களையே சேர்த்தார். இது விமர்சனத்துக்கு உள்ளானது.
பிட்ச்சின் தன்மையால் பந்து தாழ்வாக, மெதுவாக சென்றதால் பேட்ஸ்மேன்கள் ஆட திணறினர். விக்கெட் விழாமல் இருப்பதற்காக சஹலுடன் இணைந்து மெதுவாக ஆடினார் தோனி.
இதுதொடர்பாக மேக்ஸ்வெல் கூறியதாவது:
இதுபோன்ற பிட்ச்களில் அவ்வளவு தான் ரன்களை எடுக்க முடியும்.  பந்து மிகவும் தாழ்வாக வந்ததால், தோனியால் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது. அவரது ஆட்டத்தில் எந்த தவறும் இல்லை. 
ஆட்டத்தின் இறுதியில் சிறப்பாக ஆடுவதில் உலகிலேயே வல்லவரான தோனியே இதில் ஆடுவதற்கு சிரமப்பட்டார். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் குறிப்பாக நாதன் நைல் சிறப்பாக ஆடி, இந்திய அணியைக் கட்டுப்படுத்தினார்.
இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலகக் கோப்பை அணியில் இடம் பெறலாம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.