ஆஸ்திரேலியா 127/7 (மேக்ஸ்வெல் 56, ஷார்ட் 37, பும்ரா 3-16) இந்தியா 126/7 (ராகுல் 50, தோனி 29*, கோல்டர் நைல் 3-26)
ஆஸி. மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களையே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. பிறகு, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வென்றது ஆஸி. கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 4 ஓவர்களில் 16 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஒருகட்டத்தில் கடைசி 30 பந்துகளில் 7 விக்கெட் மீதமுள்ள நிலையில் 29 ரன்களை மட்டுமே எடுக்கவேண்டிய நிலை ஆஸி. அணிக்கு ஏற்பட்டது. இதனால் இந்திய ரசிகர்களுக்கு இந்த ஆட்டத்தின் மீதான ஆர்வம் குறைந்தது. அதன்பிறகு இந்தியப் பந்துவீச்சாளர்கள் விஸ்வரூபம் எடுத்தார்கள். அடுத்த 4 ஓவர்களுக்கு ஆஸி. அணியால் ஒரு பவுண்டரியும் அடிக்கமுடியாமல் போனது.
19-வது ஓவரில் பும்ராவின் பந்துவீச்சை ஆஸி. வீரர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. ஹேண்ட்ஸ்கோம்ப் 13 ரன்களோடு ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்தப் பந்திலேயே கோல்டர் நைலை 4 ரன்களில் போல்ட் செய்தார். இதனால் கடைசி ஓவரில் ஆஸி. அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டன. கம்மிங்ஸும் ஜை ரிச்சர்ட்சனும் கடைசி ஓவரை எதிர்கொண்டார்கள். இதனால் இந்திய அணிதான் வெற்றி பெறும் என இந்திய ரசிகர்கள் நம்பினார்கள்.
ஆனால் உமேஷ் யாதவ் கடைசி ஓவரில் சொதப்பியதால் தேவைப்பட்ட 14 ரன்களையும் எடுத்து வெற்றி பெற்றது ஆஸி. அணி. கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுத்து பரபரபான ஆட்டத்தில் வெற்றியடைந்தது. கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் பந்தில் 2 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. இதனால் பும்ராவின் சிறப்பான 19-வது ஓவரால் பலனில்லாமல் போனது. இதுகுறித்து பும்ரா கூறியதாவது:
இதுபோல நடக்கும்தான். கடைசி ஓவரில் சிறப்பாக வீசுவது என்பது எப்போதும் கடினமானதுதான். இரு முடிவுகளும் கிடைக்க வாய்ப்புண்டு. சில நேரம் 50-50 எனவும் அமையும். சிறப்பான செயலையே நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள். உங்கள் திட்டத்தில் தெளிவாக உள்ளீர்கள். சில நாள்களில் இது நினைத்ததுபோல நடக்கும். சில நேரங்களில் நமக்குச் சாதகமாக அமையாது. வருத்தப்பட ஒன்றுமில்லை. எங்களுக்கு ஏற்றவாறு ஆட்டத்தை முடிக்க நினைத்தோம். பரவாயில்லை என்று உமேஷ் யாதவுக்கு ஆறுதல் கூறும் விதமாகப் பேட்டியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலால் வரியைக் குறைக்காமல் இருந்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை ரூ. 10 உயர்ந்திருக்கும்: நிர்மலா சீதாராமன்

இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



