நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஏடிபி தரவரிசை: 94-ஆவது இடத்தில் பிரஜ்னேஷ்

ஏடிபி சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 94-ஆவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன்

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:22 am IST


ஏடிபி சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 94-ஆவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன்.
சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். ஏடிபி சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் 97-ஆம் இடத்தில் இருந்து 3 இடங்கள் முன்னேறி 94-ஆவது இடத்தில் உள்ளார் பிரஜ்னேஷ். ராம்குமார் ராமநாதன் 137-ஆவது இடத்துக்கும், யுகி பாம்ப்ரி 171-ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.
சாகித் மைனேனி 250, சசிகுமார் முகுந்த் 269-ஆம் இடங்களில் உள்ளனர். இரட்டையர் தரவரிசையில் ரோஹன் போபண்ணா, திவிஜ் சரண் ஆகியோர் முறையே 38, 39-ஆவது இடங்களில் உள்ளனர். பயஸ் 73, ஜீவன் நெடுஞ்செழியன் 75, புரவ் ராஜா 96-ஆவது இடங்களில் உள்ளநர்.
மகளிர் பிரிவில் அங்கிதா ரெய்னா 164, கர்மன் தண்டி 207, பிரன்ஜலா 293-ஆவது இடங்களில் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.