2008-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவுடன் தோல்வியடையாத இந்திய அணி: சாதனையைத் தக்கவைக்குமா கோலி படை?

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 7 டி20 தொடர்களில் பங்கேற்று 3-ல் இந்தியாவும் ஒரு தொடரில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன...
2008-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவுடன் தோல்வியடையாத இந்திய அணி: சாதனையைத் தக்கவைக்குமா கோலி படை?

2008-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓர் ஆட்டம் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தோற்றது. அதன்பிறகு கடந்த 11 வருடங்களாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தோற்றதில்லை. இந்த நிலை நாளை மாறவுள்ளதா? 

ஆஸி. மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.  20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களையே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. பிறகு, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வென்றது ஆஸி. கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து பெங்களூரில் நாளை நடைபெறவுள்ள 2-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி. 

இதுவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 7 டி20 தொடர்களில் பங்கேற்று 3-ல் இந்தியாவும் ஒரு தொடரில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன. மூன்று டி20 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. இதேபோல நாளை நடைபெறும் டி20 ஆட்டத்தையும் இந்திய அணி வென்று தொடரைச் சமன் செய்யவேண்டிய நிலைமை இந்திய அணிக்கு உருவாகியுள்ளது. இந்திய அணியில் உமேஷ் யாதவுக்குப் பதிலாக சித்தார்த் கெளலும் ரிஷப் பந்துக்குப் பதிலாக ஷிகர் தவனும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர்கள்

இந்தியாவில் நடைபெற்ற டி20 தொடர்கள்

2007/08: இந்தியா வெற்றி (1-0)
2013/14: இந்தியா வெற்றி (1-0)
2017/18: சமனில் முடிந்தது (1-1)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடர்கள்

2007/08: ஆஸ்திரேலியா வெற்றி (1-0)
2011/12: சமனில் முடிந்தது (1-1)
2015/16 இந்தியா வெற்றி (3-0)
2018/19: சமனில் முடிந்தது (1-1)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com