இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் சிட்னியில் வியாழக்கிழமை தொடங்கியது.
இப்போட்யில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193, ரிஷப் பந்த் 159 ரன்களை குவித்தனர்.
தொடர்ந்து ஆடிய ஆஸி. அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. இதனிடையே, மழை குறுக்கிட்டதாலும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் ஆட்டத்தை தொடர முடியாமல் போகவே, நடுவர்கள், கேப்டன்களுடன் ஆலோசித்து மூன்றாம் நாள் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், மழை தொடர்ந்ததால் 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போட்டி நடைபெறுவதில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தொடங்கிய 4-ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸி. மேலும் ஒரு விக்கெட்டைப் பறிகொடுத்தது.
தற்போது வரை ஆஸி. அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி ஆஸி.யை விட 386 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த 1947-48-இல் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி இதுவரை ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. தற்போது அந்த சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஜினி - 173 திரைப்படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றம்?

பிரசார களத்தில் சரியான போட்டி! தவெக பிரசார வாகனத்தை தெறிக்க விட்ட திலகபாமா!

காங்கிரசை கலைத்து விடுவார் ராகுல் காந்தி: நடிகை விந்தியா பேச்சு
கேரளத்தில் வாக்குப் பதிவு முடிந்து 3 நாள்களாகியும் தரவுகளை வெளியிடாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


