/

ரஞ்சி போட்டி: காலிறுதியில் மோதும் அணிகளின் பட்டியல்!

2018-19 ரஞ்சி போட்டியில் காலிறுதியில் விளையாடும் அணிகள் முடிவாகியுள்ளன... 

News image
Updated On :10 ஜனவரி 2019, 12:22 pm

எழில்

2018-19 ரஞ்சி போட்டியில் காலிறுதியில் விளையாடும் அணிகள் முடிவாகியுள்ளன. 

குரூப் ஏ பிரிவில் விதர்பாவும் செளராஷ்டிராவும் 29 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. கர்நாடகா அணி 27 புள்ளிகளும் குஜராத் அணி 26 புள்ளிகளும் பெற்று காலிறுதிக்கு இந்த இரு அணிகளும் முன்னேறியுள்ளன. குரூப் பி பிரிவில் கேரள அணி, 16 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று தகுதியடைந்துள்ளது. இதே பிரிவில் இடம்பெற்ற தமிழக அணி, 8 ஆட்டங்களில் 1 வெற்றியுடன் 15 புள்ளிகள் மட்டுமே பெற்று 8-வது இடத்தையே பிடித்துள்ளது. குரூப் சி பிரிவில் ராஜஸ்தான் 51 புள்ளிகளும் உத்தர பிரதேசம் 41 புள்ளிகளும் பெற்று தகுதியடைந்துள்ளன. பிளேட் பிரிவில் 44 புள்ளிகளுடன் உத்தரகண்ட் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது. 

ஜனவரி 15 அன்று காலிறுதி ஆட்டங்களும் ஜனவரி 24 அன்று அரையிறுதி ஆட்டங்களும் தொடங்கவுள்ளன.  பிப்ரவரி 3 அன்று இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. 

காலிறுதி ஆட்டங்கள்

விதர்பா vs உத்தரகண்ட் 
செளராஷ்டிரா vs உத்தரப் பிரதேசம் 
கர்நாடகா vs ராஜஸ்தான் 
கேரளா vs குஜராத்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.