டெஸ்ட் தொடரில் 3-0 என கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்கா.
ஜோஹன்னஸ்பர்க்கில் இரு அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 262 ரன்களையும் (ஐய்டன் மார்க்ரம் 90), பாகிஸ்தான் 185 (சர்ப்ராஸ் அகமது 50), ஒலிவியர் 5-51)ரன்களையும் எடுத்தன. அதே போல் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 303 (குயிண்டன் டி காக் 129, ஹஸிம் ஆம்லா 81), (ஷதாப் கான் 3-41) எடுத்தது.
381 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாக். அணியால் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.
வெறும் 273 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸாத் ஷபிக் மட்டுமே 65 ரன்களை குவித்தார். ஒலிவியர் 3-74 விக்கெட்டை வீழ்த்தினர். இறுதியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாக்.கை வென்று தொடரையும் 3-0 என கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.
ஒலிவியர் தொடர் நாயகனாகவும், டி காக் ஆட்ட நாயகனாகவும் தேர்வு பெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



