இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆஸி. ஓபன்: அரை இறுதியில் ஜோகோவிச்; வெளியேறினார் செரீனா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில், ஜப்பானின் நிஷி கோரி 2ஆவது செட்டில் ஆட்டத்தைதொடர முடியாமல் விலகியதால் முதல்

News image
Updated On :24 ஜனவரி 2019, 1:10 am IST


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில், ஜப்பானின் நிஷி கோரி 2ஆவது செட்டில் ஆட்டத்தைதொடர முடியாமல் விலகியதால் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6-1, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். முதலாவதுசெட்டை 6-1 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றிய ஜோகோவிச், அபாரமான சர்வீஸ்களை செய்தார். வலது தொடையில் தசை பிடிப்பு பிரச்னை ஏற்பட்டதால் ஆட்டத்தை கைவிடுவதாக நிஷிகோரி அறிவித்தார். இதையடுத்து, ஜோகோ விச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரான்ஸ் வீரர் பௌலேவை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில்ஜோகோவிச் சந்திக்கிறார்.
செரீனா தோல்வி: 
4 வகை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் பிளிஸ்கோவாவிடம் 4-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
மற்றொரு காலிறுதியில் வெற்றி பெற்ற ஜப்பானின் ஒஸாகா, வியாழக்கிழமை அரையிறுதியில் பிளிஸ்கோவாவை எதிர்கொள்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.