டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு இவ்விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்: விராட் கோலி

நான் ஆட்டமிழந்ததால் புதிதாக வந்த பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாட சிறிது நேரம் தேவைப்பட்டது... 

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:58 am

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராகவும் வெற்றியடையும் நிலையில் உள்ளது. 

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணி, 40.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியப் பந்துவீச்சாளர்களில் குல்தீப் 4 விக்கெட்டுகளையும் சாஹல், புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளையும் ஷமி, ஜாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். ஆட்ட நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்குக் கிடைத்தது.

இந்நிலையில் பரிசளிப்பு விழாவின்போது இந்திய கேப்டன் விராட் கோலி பேசியதாவது:

இந்த ஆடுகளத்துக்கு 325 என்பது சரியான ஸ்கோர் தான். எனினும் நியூஸிலாந்து பேட்டிங்கைக் காணும்போது இந்த ஸ்கோரினால் உங்களால் செளகரியமாக உணரமுடியாது. ஆனால் அனைத்திலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளது நல்ல விஷயம். 34-40 ஓவர்களில் வேகமாக ரன்கள் குவிக்கவேண்டும் என்று நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் நான் ஆட்டமிழந்ததால் புதிதாக வந்த பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாட சிறிது நேரம் தேவைப்பட்டது. உலகக் கோப்பைப் போட்டி நெருங்கும் சமயத்தில் இதுபோன்ற விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தவேண்டும். எடுத்த ஸ்கோரை விடவும் கூடுதலாக 15-20 ரன்கள் எடுக்க எண்ணினோம். அதேசமயம், எங்களுடைய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எதுவுமின்றி 40 ரன்கள் கொடுப்பதில் ஆர்வம் காண்பிக்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக 60 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுக்கவே எண்ணுவார்கள். அந்த மனநிலை எங்களுக்கு முக்கியமான ஒன்றாகும் என்று கூறியுள்ளார். 

2-வது ஒருநாள் ஆட்டத்தை 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம், இதே மைதானத்தில் திங்கள் அன்று நடைபெறவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.