மகளிர் டி20 உலகக்கோப்பை: மகளிர் தினத்தன்று நடைபெறவுள்ள இறுதிச்சுற்று ஆட்டம்!
முதல் நாளன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன...


2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆடவர் மற்றும் மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான அட்டவணைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
மகளிர் டி20 உலகக் கோப்பை, 2020-ம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் தொடங்குகிறது. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. முதல் நாளன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன. சிட்னி, கேன்பெரா, பெர்த், மெல்போர்ன் ஆகிய நகரங்களில் மகளிர் டி20 உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 5 அன்று நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் மார்ச் 8 அன்று நடைபெறவுள்ளது.
2020 மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஆட்டங்கள்
பிப்ரவரி 21: இந்தியா vs ஆஸ்திரேலியா
பிப்ரவரி 24: இந்தியா vs தகுதி பெறும் அணி 1
பிப்ரவரி 27: இந்தியா vs நியூஸிலாந்து
பிப்ரவரி 29: இந்தியா vs இலங்கை
மகளிர் டி20 உலகக் கோப்பை - சாம்பியன்கள்
2009 - இங்கிலாந்து
2010 - ஆஸ்திரேலியா
2012 - ஆஸ்திரேலியா
2014 - ஆஸ்திரேலியா
2016 - மேற்கிந்தியத் தீவுகள்
2018 - ஆஸ்திரேலியா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...