இங்கிலாந்து அணி இந்த வெற்றியைப் பெறுவதற்காக 27 வருடங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடைசி கட்ட லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், கடைசி 4 இடங்களைப் பிடிக்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆஸ்திரேலியா மட்டும் அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளதால், மீதமுள்ள 3 இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய லீக் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நடப்பு தொடரில் தோல்வியே காணாத அணியாக திகழ்ந்த இந்தியா, 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.

இதன்மூலம் உலகக் கோப்பை தொடரில் 27 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணி முடிவுகள் பின்வருமாறு:
- 1975 - இங்கிலாந்து வெற்றி
- 1983 - இந்தியா வெற்றி
- 1987 - இங்கிலாந்து வெற்றி
- 1992 - இங்கிலாந்து வெற்றி
- 1999 - இந்தியா வெற்றி
- 2003 - இந்தியா வெற்றி
- 2011 - இரு அணிகளுக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது
- 2019 - இங்கிலாந்து வெற்றி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக ஆட்சியில் லஞ்ச லாவண்யமற்ற அரசு: புதிய வாக்குறுதிகளை அறிவித்தாா் விஜய்

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்
14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொள்ளையா் உ.பி.யில் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


