மகேந்திர சிங் தோனி மற்றும் அம்பத்தி ராயுடு தொடர்பான முடிவுகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியை ஞாயிற்றுக்கிழமை அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் மகேந்திர சிங் தோனி பங்கேற்கவில்லை. இருப்பினும் அடுத்து வரவுள்ள உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு எதிர்கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கி அவரது செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க உள்ளோம்.
அம்பத்தி ராயுடு, டி20 ஆட்டத்தின் வெளிப்பாடுகளின் அடிப்படையிலேயே ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதனால் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால், அதில் எங்களுக்கு வேறு திட்டங்கள் தொடர்பான யோசனைகளும் இருந்தன. அவர் உடல்தகுதியில் தோல்வியுற்றபோது கூட அதற்கான பயிற்சியிலும் ஈடுபடுத்தினோம்.
அணித் தேர்வு தொடர்பான சில திட்டங்களின் அடிப்படையிலேயே அம்பத்தி ராயுடு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதனால் நாங்கள் ஒரு சார்பாக செயல்படுவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


