தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பரபரப்பான கட்டத்தில் லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்துமா அயர்லாந்து? (ஹைலைட்ஸ் விடியோ)

4 நாள் லார்ட்ஸ் டெஸ்டை அயர்லாந்து அணி வெல்வதற்கான பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது... 

News image
Updated On :26 ஜூலை 2019, 6:10 am

எழில்

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட்  ஆட்டம் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. 

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அடுத்தடுத்த விக்கெட்டுகளின் சரிவால் முதல் இன்னிங்ஸில் 23.4 ஓவர்களில் 85 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ டென்லி 4 பவுண்டரிகள் உள்பட 23 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் டிம் முர்டாக் 13 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். 

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய அயர்லாந்து, 58.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆன்டி பால்பிர்னி 10 பவுண்டரிகள் உள்பட 55 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட், ஆலி ஸ்டோன், சாம் கரன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

பின்னர் முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து கவனமாக விளையாடியது. 2-ம் நாளின் முடிவில் 77.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. லீச் 92, ராய் 72 ரன்கள் எடுத்துள்ளார்கள். இதனால் இங்கிலாந்து அணி 1 விக்கெட் மீதமுள்ள நிலையில் 181 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் 4 நாள் லார்ட்ஸ் டெஸ்டை அயர்லாந்து அணி வெல்வதற்கான பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.