7-ஆம் நிலையில் தோனி களமிறங்க சஞ்சய் பாங்கர் நிர்பந்தம்?

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் தற்போதைய பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் மீண்டும் தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
7-ஆம் நிலையில் தோனி களமிறங்க சஞ்சய் பாங்கர் நிர்பந்தம்?

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் தற்போதைய பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் மீண்டும் தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்த புதிய பயிற்சியாளரை, கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) தேர்வு செய்யவுள்ளது. 
இந்த ஆலோசனைக் குழுவில் மகளிரணி முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி, ஆடவரணி முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். 

இந்நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் தற்போதைய பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் மீண்டும் தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதுபோன்று ஃபீல்டிங்கிலும் இந்திய அணி நல்லமுறையில் செயல்படுவதால் ஆர்.ஸ்ரீதர் பெயரும் பரிசீலனையில் உள்ளது. இருப்பினும் உலகளவில் புகழ்பெற்ற தென் ஆப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் இப்பதவிக்கு விண்ணப்பித்திருப்பதால், இதில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் சிறந்த வீரர்களாக திகழ்ந்தாலும், அவர்களின் இந்த ஆட்டத்துக்கு பேட்டிங் பயிற்சியாளர் மட்டும்தான் காரணம் என்று கூற முடியாது. அதேவேளையில் நடுவரிசை பேட்டிங் அமையாத காரணத்தால் சஞ்சய் பாங்கர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் எனவும் பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய அதிர்ச்சிக்குரிய சம்பவமாக உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோனி 7-ஆம் நிலையில் களமிறங்க வேண்டும் என சஞ்சய் பாங்கர் அறிவுறுத்தியதாகவும் இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com