தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஒருநாள் அணியில் இடம்பிடித்தார் கிறிஸ் கெயில்! ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு இடமில்லை!

உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற்றுவிடுவேன் என முதலில் அறிவித்தார் கிறிஸ் கெயில்...

News image
Updated On :27 ஜூலை 2019, 9:51 am

எழில்

உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற்றுவிடுவேன் என முதலில் அறிவித்தார் கிறிஸ் கெயில். அதன்பிறகு, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்றார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற வாய்ப்பு தந்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவினர்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள மே.இ. தீவுகள் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய சுனில் அம்ப்ரிஸ், டேரன் பிராவோ, ஆஷ்லி நர்ஸ், ஷன்னான் கேப்ரியல் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல பிரபல வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். ஜான் கேம்பல், ராஸ்டன் சேஸ், கீமோ பால் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள். 

ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த மேற்கிந்தியத் தீவுகள் வீரரான பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க கெயிலுக்கு இன்னும் 12 ரன்களே தேவை. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இச்சாதனையை கெயில் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆகஸ்ட் 8 முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.