விராட் கோலி தன்னை பிரதிபலிப்பதாக மேற்கிந்திய தீவுகள் ஜாம்பாவன் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் புகழாரம் சூட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
விராட் கோலி போன்று கிரிக்கெட் விளையாடும் வீரர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். விராட் கோலியின் செயல்பாடுகள் உங்களுக்கு அகந்தையின் வெளிப்பாடாக தெரியும்.
ஆனால், நம் மீதான நம்பிக்கை வெளிப்படும்போது அவ்வாறு தான் இருக்கும். அது தான் கிரிக்கெட்டை சரியாக விளையாடும் முறையாகும். நமது வீடு முழுவதும் எப்படி நமக்கு தெரியுமோ! அதேபோன்று தான் விராட் கோலிக்கு தனது ஆட்டம் குறித்து தெரியும்.
எனது காலத்தில் நான் எப்படி இருந்தேனோ அதேபோன்று தான் விராட் கோலியும் தற்போது உள்ளார். அவர் என்னை பிரதிபலிக்கிறார். அவருடைய ஆட்டம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
கோலிக்கு உள்ளது போன்ற நம்பிக்கையை ஒன்றும் ஒரு இரவில் பெற்றுவிட முடியாது. விராட் சிறந்த போராளி, அவர் எப்போதும் தனது அணியை எந்த சூழலிலும் திறம்பட கவனித்துக்கொள்வார் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏப்.18 வரை மழைக்கு வாய்ப்பு!

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


