உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆடம் சாம்பா பந்தை சேதப்படுத்தவில்லை: ஆஸி. கேப்டன் விளக்கம்

ஆடம் சாம்பா பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த சர்ச்சைக்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் விளக்கமளித்துள்ளார். 

Published On :

ஆடம் சாம்பா பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த சர்ச்சைக்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் விளக்கமளித்துள்ளார். 

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் சாம்பா பந்துவீசும் போது தனது பாக்கெட்டில் அடிக்கடி கை வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித், வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டனை அனுபவித்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், மற்றொரு ஆஸி. வீரர் மீது அதே புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில்,

நான் இன்னும் நீங்கள் குறிப்பிடும் புகைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், ஆடம் சாம்பா உள்ளங்கைகளை உஷ்ணப்படுத்தும் கையடக்க வார்மரை பயன்படுத்துவது வழக்கம். ஒவ்வொரு ஆட்டதிலும் அவர் இதனைப் பயன்படுத்துவார். எனவே இதில் எந்தவித கருத்தையும் நான் தெரிவிக்க விரும்பவில்லை என்று விளக்கமளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.