டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இன்ஸமாம், மிக்கி ஆர்தருக்கு கல்தா: பாகிஸ்தான் அணியில் பெரிய மாற்றங்கள்?

பாகிஸ்தான் அணி நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :19 ஜூன் 2019, 4:11 am

Raghavendran

பாகிஸ்தான் அணி நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் உட்பட பலர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கடுமையாகச் சாடி வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் இன்ஸமாம்-உல்-ஹக், பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர், அணி மேலாளர் தாலத் அலி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் அசார் மெஹமூத் உள்ளிட்ட பல கிரிக்கெட் அணி நிர்வாகிகள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கூட்டம் லாகூரில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. அப்போது இந்த பெரிய அளவிலான மாற்றங்கள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்காக பாகிஸ்தான் அணியின் நிர்வாக இயக்குநர் வாசிம் கான் தனது சுற்றுப்பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்புவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.