ஐபிஎல்-லுக்கு முன்பு அபாரமான ஃபார்மில் முரளி விஜய்: டி20 ஆட்டத்தில் அதிரடி சதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த முரளி விஜய் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி நல்ல ஃபார்மை எட்டியுள்ளார்.


சூரத்தில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் மேஹாலயா அணிக்கு எதிராக தமிழக அணியின் முரளி விஜய் சதமடித்துள்ளார்.
தமிழக அணி முதலில் விளையாடிய இந்த ஆட்டத்தில் 33 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் முரளி விஜய். கடந்த 3 டி20 ஆட்டங்களிலும் அவர் தொடர்ச்சியாக அரை சதம் எடுத்துள்ளார். அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். இதையடுத்து அதிரடி ஆட்டத்தின் மூலம் விரைவாக சதமடித்தார் முரளி விஜய். தமிழக அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. முரளி விஜய் 67 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தமிழக வீரர்களில் டி20 சதமடித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். வாஷிங்டன் சுந்தர் 53 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் போட்டி மார்ச் 23 முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த முரளி விஜய் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி நல்ல ஃபார்மை எட்டியுள்ளார். இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...