3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

டி20: மேற்கிந்தியத் தீவுகள் அணியை எளிதாக வென்ற இங்கிலாந்து!

தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச்சென்றார்...

News image
Updated On :6 மார்ச் 2019, 12:25 pm

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-2 என சமன் செய்தது மே.இ.தீவுகள். இந்நிலையில் முதல் டி20 ஆட்டம் நேற்று செயிண்ட் லுசியாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. பூரான் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். கெயில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்தின் டாம் கரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இலக்கை, 18.5 ஓவர்களில் அடைந்தது. இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச்சென்றார். 

இதையடுத்து 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து. அடுத்த டி20 ஆட்டம் வெள்ளியன்று நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.