ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சக வீரர்களுக்கு விருந்தளித்த தோனி! (படங்கள்)

தோனி-சாக்‌ஷி தம்பதி, நகருக்கு வெளியில் உள்ள தங்களது பரந்த பண்ணை வீட்டில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்தளித்தனர்...

News image
Updated On :8 மார்ச் 2019, 8:53 am

எழில்

இந்திய-ஆஸி. அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆஸி. 2-0 என கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக ஒரு நாள் தொடரில் இந்தியா ஏற்கெனவே 2 ஆட்டங்களை வென்று விட்டது.

ராஞ்சியில் 2 அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது. தோனியின் சொந்த ஊர் என்பதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளது இந்தியா.

இந்நிலையில், ஆஸி.யுடன் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்பதற்காக தோனியின் சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்த இந்திய அணி வீரர்களுக்கு தோனி தம்பதி விருந்தளித்தனர். தோனி-சாக்‌ஷி தம்பதி, நகருக்கு வெளியில் உள்ள தங்களது பரந்த பண்ணை வீட்டில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்தளித்தனர். இதற்கு நன்றி தெரிவித்து கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் ட்விட்டரில் புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.