47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிசிசிஐயின் ரூ. 5 கோடி ஒப்பந்தம் பெற்ற ரிஷப் பந்த்! ஒப்பந்தப் பட்டியலில் இருந்து முரளி விஜய் நீக்கம்!

கடந்த வருட ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சுரேஷ் ரெய்னா, பார்தீவ் படேல், ஜெயந்த் யாதவ், அக்‌ஷர் படேல், கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர்

News image
Updated On :8 மார்ச் 2019, 5:54 am

எழில்

2018-19 சீசனுக்காக ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் இளம் வீரர்களான ரிஷப் பந்த், குல்தீப் யாதவ் ஆகியோர் ரூ. 5 கோடி உள்ள கிரேடு ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளார்கள். 

கடந்த வருட ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறாத ரிஷப் பந்த் நேரடியாக ஏ கிரேடுக்கு உயர்ந்துள்ளார். இந்த ஒப்பந்தம் அக்டோபர் 1 2018 முதல் செப்டம்பர் 30, 2019 வரையிலான காலகட்டத்தைக் கொண்டது. 

ரூ. 7 கோடி ஒப்பந்தம் கொண்ட கிரேடு ஏ + பிரிவில் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, ரஹானே, தோனி, தவன், ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோர் ரூ. 5 கோடி ஒப்பந்தம் கொண்ட கிரேடு ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளார்கள்.

ரூ. 3 கோடி ஒப்பந்தம் கொண்ட கிரேடு பி பிரிவில் கேஎல் ராகுல், உமேஷ் யாதவ், சாஹல், ஹார்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ரூ. 1 கோடி ஒப்பந்தம் கொண்ட கிரேடு சி பிரிவில் கெதவ் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பட்டி ராயுடு, மணீஷ் பாண்டே, விஹாரி, கலீல் அஹமது, சாஹா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்த ஒப்பந்தத்தில் ரிஷப் பந்த், அம்பட்டி ராயுடு, விஹாரி, கலீல் அஹமது ஆகியோர் புதிதாக இடம்பெற்றுள்ளார்கள்.

கடந்த வருட ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சுரேஷ் ரெய்னா, பார்தீவ் படேல், ஜெயந்த் யாதவ், அக்‌ஷர் படேல், கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் இந்தமுறை இடம்பெறவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.