மோசமாக விளையாடும் தவனின் நிலை என்ன?: இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பதில்!
இந்தியத் தொடக்க வீரர் தவன் சமீபகாலமாக மோசமாக விளையாடி வருகிறார். கடந்த 17 ஒருநாள் ஆட்டங்களில்...


இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸி., 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது. 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. கேப்டன் கோலியின் சதமும் வீணானது. 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 4ஆவது ஒரு நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மொஹலியில் நடைபெறவுள்ளது.
இந்தியத் தொடக்க வீரர் தவன் சமீபகாலமாக மோசமாக விளையாடி வருகிறார். கடந்த 17 ஒருநாள் ஆட்டங்களில் 50-க்கும் அதிகமான ரன்களை இருமுறை மட்டுமே எடுத்துள்ளார். 2019-ல் 11 இன்னிங்ஸில் 265 ரன்கள் எடுத்துள்ளார். தவன் ஃபார்மில் இல்லாதது இந்திய அணிக்குக் கவலையை ஏற்படுத்துகிறதா? இதுகுறித்து பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியதாவது:
கடந்த ஆட்டத்தில் தவன் நன்றாக விளையாடி வந்தார். தவறான ஒரு ஷாட்டில் ஆட்டமிழந்தார். என்னைப் பொறுத்தவரை அவர் முக்கியமான வீரர். அவர் நன்கு விளையாடும்போது நமக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கிறார். மேலும், இடது - வலது கூட்டணி இருப்பது முக்கியமானது. மிகவும் மதிப்புமிக்க வீரர். அவர் விரைவில் தனது ஃபார்மை அடைவார் என எண்ணுகிறோம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...