ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வலைப்பயிற்சியின்போது விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார்: தோனி குறித்து வியந்து பேசும் சிஎஸ்கே வீரர்!

தோனி அபாரமான உடற்தகுதிகளைக் கொண்டுள்ளார். மைதானத்தில் அவர் நகரும் வேகத்தைப் பார்த்தால் அவருக்கு 37 வயது என...

News image
Updated On :12 மார்ச் 2019, 9:50 am

எழில்

ஐபிஎல் (2019) 12-வது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. மார்ச் 23-ஆம் தேதி நடக்கவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 

இந்நிலையில் தோனி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தமிழக அணி வீரருமான என். ஜெகதீசன் கூறியதாவது:

தோனி அபாரமான உடற்தகுதிகளைக் கொண்டுள்ளார். மைதானத்தில் அவர் நகரும் வேகத்தைப் பார்த்தால் அவருக்கு 37 வயது என எண்ணவே முடியாது. அவர் மிகவும் அமைதியாக இருப்பார். அரிதாகவே பேசுவார். ஆனால் அந்தச் சொற்கள் அணியை மிகவும் உற்சாகமூட்டும். வலைப்பயிற்சிகளின்போது தோனி விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார். அவர் நேரடியாக ஆட்டங்களில்தான் விக்கெட் கீப்பிங் செய்வார். நான் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது என்னிடம் வந்து ஆலோசனைகளைக் கூறுவார். எனக்கு விக்கெட் கீப்பிங்கிலும் பேட்டிங்கிலும் சந்தேகம் இருந்தால் அவரிடம் தான் கேட்பேன் என்று தோனியைப் புகழ்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.