சமூக, மதக் காரணங்களுக்காக என் மகள்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடமாட்டார்கள்: சாஹித் அஃப்ரிடி

உள் அரங்கில் விளையாடப்படும் விளையாட்டை அவர்கள் விரும்பும்வரை விளையாடலாம்...
சமூக, மதக் காரணங்களுக்காக என் மகள்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடமாட்டார்கள்: சாஹித் அஃப்ரிடி

கேம் சேஞ்சர் என்கிற தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடி. அந்த நூலில் தன்னுடைய நான்கு மகள்கள் குறித்து அவர் எழுதியதாவது:

அக்ஸா 10-வது படிக்கிறார். அன்ஷா 9-வது. இருவரும் விளையாட்டில் சிறப்பாக உள்ளார்கள். படிப்பை விடவும் அதில் ஈடுபாடு அதிகம். அஜ்வா, அஸ்மாரா சிறிய பெண்கள், நன்கு ஆடை உடுத்த விரும்புவார்கள். என் மகள்கள் உள் அரங்கில் விளையாடும் எந்த விளையாட்டையும் விளையாட என்னுடைய அனுமதி உண்டு.

கிரிக்கெட்? நிச்சயம் என் மகள்கள் அதில் ஈடுபடமாட்டார்கள். உள் அரங்கில் விளையாடப்படும் விளையாட்டை அவர்கள் விரும்பும்வரை விளையாடலாம். ஆனால் வெளி அரங்கில் நடத்தப்படும் விளையாட்டுகளில் என் மகள்கள் பங்கேற்கமாட்டார்கள். சமூக மற்றும் மதக் காரணங்களுக்காக இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். என் மனைவியும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். பெண்ணியவாதிகள் தாங்கள் விரும்புவதைக் கூறலாம். ஒரு பழமையான பாகிஸ்தான் தந்தையாக, நான் என் முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com