உலகக் கோப்பை அணிகள்: பாரம்பரிய அணிகளுக்கு சவால் விடும் வங்கதேச புலிகள்

கிரிக்கெட் உலகில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை போன்றவை வழக்கமாக பலம் மிக்க அணிகளாக திகழ்கின்றன. இவற்றுக்கு சவால் விடும் வகையில் இந்திய
உலகக் கோப்பை அணிகள்: பாரம்பரிய அணிகளுக்கு சவால் விடும் வங்கதேச புலிகள்
Updated on
2 min read


கிரிக்கெட் உலகில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை போன்றவை வழக்கமாக பலம் மிக்க அணிகளாக திகழ்கின்றன. இவற்றுக்கு சவால் விடும் வகையில் இந்திய துணைக் கண்டத்தில் வங்கதேச அணியும் உருவாகியுள்ளது.
புலிகள் எனப்படும் வங்கதேச அணி கடந்த 1979-ஐசிசி கோப்பையில் பங்கேற்றது. கடந்த 1986-இல் முதல் ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்றது. அதே நேரத்தில் 1999 உலகக் கோப்பையில் முதன்முதலாக கலந்து கொண்டவங்கதேசம், பலம் வாய்ந்த பாகிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தியது. 2000-இல் ஐசிசியில் முழுமையான உறுப்பினர் அந்தஸ்து பெற்றது. 2003, 2007 2011 உலகக் கோப்பைகளிலும் பங்கேற்ற அந்த அணி, 2015-இல் காலிறுதி வரை முன்னேறியது.தற்போது இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியிலும் கலந்து கொள்கிறது. 

மஹ்முத்துல்லா
33 வயதான மஹ்முத்துல்லா தொடக்கத்தில் பவுலராக ஆடத் தொடங்கி பின்னர் ஆல்ரவுண்டர் ஆனார். 172 ஒருநாள் ஆட்டங்களில் மொத்தம் 3673 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 128 ஆகும். 3 சதம், 20 அரைசதம் அடங்கும். பந்துவீச்சில் 76 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 3-4 அவரது சிறந்த பந்துவீச்சாகும். கடந்த 2007-இல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்த முதல் வங்கதேச வீரர் என்ற பெருமை இவருக்குண்டு.

மஷ்ரப் மோர்டாஸா (கேப்டன்)
35 வயதான மோர்டாஸாவின் கிரிக்கெட் வாழ்க்கை காயங்களால் நிறைந்தது. பந்துவீச்சாளரான அவர் 206 ஒருநாள் ஆட்டங்களில் 262 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6-26 ஆகும். கடந்த 2001-இல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். பவுன்சர்கள் வீசுவதில் வல்லவர். 

ஷகிப் அல் ஹசன் 
32 வயதான ஷகிப் அல் ஹசனும் வங்கதேச கிரிக்கெட்டில் பிரபலமானவர். பேட்டிங் ஆல்ரவும்டரான அவர், 196 ஆட்டங்களில் 5638 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 134 ஆகுóம். 7 சதங்கள், 41 அரைசதங்கள் இதில் அடங்கும். பந்துவீச்சில் 248 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். சிறந்த பந்துவீச்சு 5-47 ஆகும். கடந்த 2006-இல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். வங்கதேச அணியின் வெற்றிகளில் இவரது பங்கும் உண்டு.

மெஹிதி ஹாசன்
21 வயது இளம் வீரரான மெஹிதி ஹாசன் , சுழற்பந்து வீச்சாளர். 26 ஆட்டங்களில் 27 விக்கெட்டுகளை வீழ்த்திய அவரது சிறந்தபந்துவீச்சு 4-29 ஆகும். கடந்த 2017-இல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். 

தமிம் இக்பால்
இடதுகை பேட்ஸ்மேனான தமிம் இக்பால் (30) கடந்த கடந்த 2007-இல் ஒருநாள் ஆட்டங்களில் அறிமுகமானார். 190 ஆட்டங்களில் மொத்தம் 6540 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 154 ஆகும். இதில் 11 சதம், 45 அரைசதங்களும் அடங்கும். தொடக்க வீரர்களில் சேவாக், டெண்டுல்கர், சனத் ஜெயசூர்யா ஆகியோர் அதிரடிக்கு பேர் பெற்றவர்கள். அவர்கள் வரிசையில் தமிம் இக்பாலும் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் பெற்றுள்ளார்.

மெஹிதி ஹாசன்
21 வயது இளம் வீரரான மெஹிதி ஹாசன் , சுழற்பந்து வீச்சாளர். 26 ஆட்டங்களில் 27 விக்கெட்டுகளை வீழ்த்திய அவரது சிறந்தபந்துவீச்சு 4-29 ஆகும். கடந்த 2017-இல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். 

முஷ்பிகுர் ரஹ்மான் 
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹ்மான் (31) கடந்த 2006-இல் ஒருநாள் தொடரில் அறிமுகமானார். 202 ஆட்டங்களில் மொத்தம் 5424 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 144 ஆகும். மேலும் 6 சதங்கள், 32 அரைசதங்கள் இதில் அடங்கும். ஸ்ட்ம்புக்கு பின் துரிதமாக செயல்படும் விக்கெட் கீப்பர் என்ற சிறப்பு இவருக்குள்ளது.

செளமிய சர்க்கார் 
26 வயது செளமிய சர்க்கார் இடதுகை பேட்ஸ்மேன் ஆவார். கடந்த 2014-இல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமான அவர் மொத்தம் 42 ஆட்டங்களில் 1347 ரன்களை சேர்த்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 127 ஆகும். மேலும் 2 சதம், 8 அரைசதங்கள்  இதில் அடங்கும். ஆசிரியர் பணிக்கு செல்ல ஆசைப்பட்ட சர்க்கார் கிரிக்கெட் வீரராக மாறி விட்டார்.

முஸ்தபிஸுர் ரஹ்மான்
23 வயது இளம் வீரரான முஸ்தபிஸுர் இடதுகை மிதவேகப்பந்து வீச்சாளர். 44 ஒரு நாள் ஆட்டங்களில் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6-43 ஆகும். கடந்த 2015-இல் ஒருநாள் தொடரில் அறிமுகமானார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com