நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன்: பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் அறிவிப்பு 

நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன் என்று இந்தியாவின் பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன்: பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் அறிவிப்பு 
Updated on
1 min read

புது தில்லி: நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன் என்று இந்தியாவின் பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் துத்தி சந்த். பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனையான இவர் இந்தியா சார்பாக 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 100 மீ மற்றும் 200 மீ போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்.

தற்போது அவர் சர்வதேச தடகளப் போட்டிகளுக்கும், அவை முடிந்த பின்னர் 2020-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தயாராகி வருகிறார்.

இந்நிலையில் நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன் என்று துத்தி சந்த் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளவது:

எனக்கு ஆத்ம துணையாக இருக்கக்கூடிய ஒருவரை நான் கண்டடைந்துள்ளேன். ஒடிஷா மாநிலத்தில் எனது சொந்த ஊரான சக்கா கோபாலபுரில் உள்ள ஒரு பெண்ணை நான் விரும்புகிறேன். ஒவ்வொருவரும் தாங்கள் யாரை விரும்புகிறார்களோ, அவர்களுடன் வாழவதற்கான சுதநதிரம் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். தன் பாலின உறவை மேற்கொள்வோர்களின்  உரிமைகளை எப்போதுமே நான் ஆதரித்து வந்துள்ளேன். அது தனிப்பட்ட ஒருவரின் உரிமையாகும்.

தற்போது என்னுடைய குறிக்கோள் எல்லாம் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளிலும்தான் உள்ளது.  ஆனால் நான் இறுதியாக அவளுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்.        

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com