சென்னையில் நடைபெற்றுவந்த 19வயதுக்குள்பட்டோருக்கான ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில், மணிப்பூர் வீரர் மைஸ்னம் மெராபாவும், தெலங்கானா வீராங்கனை சமியா இமாத் ஃபரூக்கும் முறையே ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
தில்லி வீரர் ஆகாஷ் யாதவ் காயம் காரணமாக ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். அப்போது, 21-9, 12-7 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்தார் மணிப்பூர் வீரர். இதையடுத்து, அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற மகளிர் பிரிவு இறுதிச்சுற்றில், தில்லி வீராங்கனை ஆஷி ராவத்தை 21-17, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சமியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






