ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பிஎஸ்ஏ சேலஞ்சர்: மகேஷ் மங்காவன்கர் வெற்றி

தொழிற்முறை ஸ்குவாஷ் கூட்டமைப்பு (பிஎஸ்ஏ) சேலஞ்சர் டூர் போட்டியான செகிசுயி ஓபனில் இந்திய வீரர் மகேஷ் மங்காவன்கர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

News image
Updated On :27 மே 2019, 1:50 am IST

தொழிற்முறை ஸ்குவாஷ் கூட்டமைப்பு (பிஎஸ்ஏ) சேலஞ்சர் டூர் போட்டியான செகிசுயி ஓபனில் இந்திய வீரர் மகேஷ் மங்காவன்கர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
சுவிட்சர்லாந்தின் கிரையன்ஸ் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் முதலிடம் வகித்த மகேஷ், 3ஆவது இடம் வகித்த ஸ்பெயின் வீரர் பெர்னட் ஜாமேவை 11-9, 3-11, 11-5, 11-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மொத்தம் 48 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
3 ஆண்டுகளுக்கு முன்பு முதல்முறையாக செகிசுயி ஓபனில் பட்டம் வென்றார் மகேஷ். தற்போது, இரண்டாவது முறையாக சாம்பியனாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.