தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பிரெஞ்ச் ஓபன்: ஃபெடரர் வெற்றி தொடக்கம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லோரென்úஸா சோனேகோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்க

News image
Updated On :27 மே 2019, 1:57 am IST

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லோரென்úஸா சோனேகோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
முன்னாள் சாம்பியனான 37 வயது ஃபெடரர், 24 வயது சோனேகோவை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டார்.
முதல் சுற்று ஆட்டத்தை 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். 2ஆவது சுற்று விறுவிறுப்பாக அமைந்தது. அந்த சுற்று ஆட்டத்திலும் ஃபெடரரே ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 6-4 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றினார். மூன்றாவது செட்டையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார் ஃபெடரர்.
புதன்கிழமை நடைபெறவுள்ள அடுத்த சுற்று ஆட்டத்தில், ஜெர்மனி வீரர் ஆஸ்கர் ஒட்டேவை எதிர்கொள்கிறார் ஃபெடரர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், ஜப்பான் வீரர் நிஷிகோரி, பிரான்ஸ் வீரர் குயின்டின் ஹாலிûஸ 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 4-6, 2-6 என்ற செட் கணக்கில், ரஷிய வீராங்கனை அனஸ்தாஸியா போடபோவாவிடம் தோல்வியுற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஸா, 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில், அமெரிக்க வீராங்கனை டெய்லர் டவுன்சென்டை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.