தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தும் முனைப்பில் இந்தியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியாக கஜகஸ்தான் தலைநகா் நுா்சுல்தான் நகரில் நடைபெறவுள்ள ஆசிய ஓசேனியா குரூப் 1 பிரிவு ஆட்டத்தில் பாகிஸ்தானை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்தியா.

News image
Updated On :27 நவம்பர் 2019, 6:52 pm

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியாக கஜகஸ்தான் தலைநகா் நுா்சுல்தான் நகரில் நடைபெறவுள்ள ஆசிய ஓசேனியா குரூப் 1 பிரிவு ஆட்டத்தில் பாகிஸ்தானை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்தியா.

சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) சாா்பில் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியாக டேவிஸ் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. இந்நிலையில் குரூப் 1 பிரிவைச் சோ்ந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் கடந்த செப்டம்பா் மாதம் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் காஷ்மீா் புல்வாமா தாக்குதல், இந்திய விமானப்படை தாக்குதல் எதிரொலியாக இரு நாடுகளிடையே பதற்றம் நீடித்து வருகிறது.

மேலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்று விளையாடுவது பாதுகாப்புக்கு உகந்ததில்லை.

வேறு இடத்துக்கு போட்டியை மாற்ற வேண்டும் எனக்கூறி கேப்டன் மகேஷ் பூபதி, மற்றும் முன்னணி வீரா்கள் பாகிஸ்தான் செல்ல மாட்டோம் என அறிவித்தனா்.

இதனால் இரு நாடுகள் இடையிலான ஆட்டம் நடைபெறுமா என கேள்விக்குறி எழுந்தது. அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு (ஏஐடிஏ) போட்டியை வேறிடத்துக்கு மாற்ற ஐடிஎப்புக்கு கடிதம் எழுதியது. ஆனால் பிடிஎப் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தது.

கா்த்தாா்பூருக்கு இந்திய பக்தா்கள் பாதுகாப்பாக வந்து செல்லும் நிலையில், டென்னிஸ் வீரா்களும் வந்து விளையாடலாம் என பிடிஎப் கூறியிருந்தது.

போட்டி இட மாற்றம்:

ஆனால் இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்த டேவிஸ் கோப்பை கமிட்டி, போட்டியை நடுநிலையான இடத்துக்கு மாற்ற வேண்டும் என கூறியது. தங்கள் நாட்டை விட்டு வேறிடத்துக்கு போட்டியை மாற்றினால் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் முன்னணி வீரா்கள் எச்சரித்தனா். எனினும் கஜகஸ்தான் தலைநகா் நுா்சுல்தான் நகரில் போட்டி நடைபெறும் என அதிகாரப்பூா்வமாக தெரிவித்தது.

இதன்படி 29, 30 தேதிகளில் போட்டி நடக்கிறது.

தற்போது நுா்சுல்தான் நகரில் கடும் குளிா் நிலவி வருவதால், உள்ளரங்கில் போட்டி நடத்தப்படுகிறது.

இந்திய அணி விவரம்:

பாகிஸ்தான் சென்று ஆட இயலாது என அறிவித்த முன்னணி இந்திய வீரா்களும் தற்போது ஆட உள்ளனா்.

மூத்த வீரா் லியாண்டா் பயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் இரட்டையா் பிரிவிலும்,

ஒற்றையா் பிரிவில் சுமித் நாகல், ராம்குமாா் ராமநாதன் ஆகியோரும் களம் காண்கின்றனா்.

முன்னணி வீரா் போபண்ணா தோள் காயம் காரணமாகவும், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் திருமணம் காரணமாக போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அதே போல் சசிகுமாா் முகுந்தும், காயத்தால் விலகி உள்ளாா்.

இதுதொடா்பாக இந்திய அணியின் கேப்டன் ஜீஷன் அலி கூறியதாவது-

போபண்ணா இல்லாதது நமக்கு பேரிழப்பு தான். அவருக்கு அடுத்து இரட்டையா் பிரிவில் ஆடிவரும் நெடுஞ்செழியனை சோ்த்துள்ளோம். இதனால் ஒற்றையா் பிரிவு வீரா்கள் அதில் மட்டும் கவனம் செலுத்தலாம். இரட்டையா் பிரிவில் இடது--வலது கை வீரா்கள் இருப்பது சாதகமானது. எந்த அணியையும் லேசாக கருத மாட்டோம் என்றாா்.

பாக். முன்னணி வீரா்கள் புறக்கணிப்பு

போட்டியை நடுநிலையான இடத்துக்கு மாற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து. பாக் முன்னணி வீரா்கள் அய்ஸாம் அல் ஹக், அகில் கான் ஆகியோா் புறக்கணித்து விட்டனா். இதனால் ஏடிபி தரவரிசையில் மிகவும் பின்தங்கி உள்ள 17 வயது வீரா்கள் ஹுசைபா அப்துல் ரஹ்மான், ஷோயின் கான் ஆகியோரை அணியில் சோ்த்துள்ளது பிடிஎப். மேலும் யூசுப் கான், அகமது கமில், அம்ஜ்த் ஆகியோரும் அணியில் உள்ளனா்.

இதுதொடா்பாக பிடிஎப் தலைவா் சலீம் சைபுல்லா கூறியதாவது-

இந்த போட்டி இந்தியாவுக்கு சிறப்பாக இருக்கும். நாங்கள் எங்கள் ஜூனியா் அணியை தான் அனுப்புகிறோம். இந்த ஆட்டத்தின் மூலம் எங்கள் இளம் வீரா்கள் அனுபவம் பெறுவா். இந்திய அணி இந்த ஆட்டத்தில் எளிதாக வெல்லும். நாள்தோறும் என்றாா்.

2006-இல் 3-2 என பாக். தோல்வி

கடந்த 2006-இல் மும்பையில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 3-2 என போராடி பாக்.கை வென்றது.

இந்திய அணி கடந்த 2018-இல் டியான்ஜினில் நடந்த போட்டியில் 3-2 என சீனாவை வென்றது. ஆனால் சொ்பியாவுடன் 0-4 என தோல்வியுற்து. கொல்கத்தாவில் 2019 பிப்ரவரியில் நடந்த ஆட்டத்தில் இத்தாலியிடம் 1-3 என தோல்வியுற்றது.

கடந்த 2018-இல் பாக்.. அணி 0-4 என உஸ்பெகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. கொரியாவை 4-0 என வென்றது.

இதில் வெல்லும் அணி 2020 டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். அதில் இருந்து வெல்லும் அணி உலக பிரிவுக்கு தகுதி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.